யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 107 கோவிட் மரணங்கள்.... - Global Tamil Voice உலக தமிழ் குரல்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 107 கோவிட் மரணங்கள்....

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 15 ஆக அதிகரித்துள்ளது என மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். அத்துடன் இம்மாவட்டத்தில் இதுவரை 107 பேர் கோவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது 3 ஆயிரத்து 604 குடும்பங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்து 603 நபர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



About UPDATE